பள்ளி தலைமை ஆசிரியை இடமாற்றத்தை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.
கும்மிடிப்பூண்டி அருகே தலைமை ஆசிரியர் இடமாற்றத்தை எதிர்த்து 100 மேற்பட்ட மாணவ மாணவியர் பள்ளி நுழைவாயிலில் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் துராபள்ளத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 400.க்கும் மேற்பட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.இந்நிலையில் இதற்கு முன் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் என்பவர் மீது கூடுதல் கட்டணம் வசூலித்தது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த காரணத்தினால் அதன் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில்.இதை அடுத்து முன்னாள் தலைமை ஆசிரியர் விருப்ப ஓய்வு பெற்றார்.
தொடர்ந்து தலைமை ஆசிரியருக்கான காலி இடத்தை செந்தில் வல்லவன் என்ற தலைமை ஆசிரியர் பள்ளி கல்வித்துறையினரால் நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்று பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர் செந்தில் வளவனின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததாக பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும் தெரிவிக்கும் நிலையில் இரண்டு மாதங்கள் மட்டுமே பணியாற்றிய அவர் திடீரென பொன்னேரி வேப்பம்பட்டு பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தலைமை ஆசிரியர் இடமாற்றத்தை கண்டித்து மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லமரத்து பள்ளியின் நுழைவாயிலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
மேலும்இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் அவர்களிடமும் பெற்றோர்களும், மாணவர்கள் தரப்பும் முறையாக மனு வழங்கப்பட்டது.இந்த நிலையில் இடமாற்றமான தலைமை ஆசிரியர் மீண்டும் இதே பள்ளிக்கு வர வேண்டுமென கூறி மாணவர்கள் பள்ளி நுழைவாயிலில் 100.க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ‘‘வேண்டும், வேண்டும் செந்தில் வளவன் சார் வேண்டும்’’ என்ற முழக்கமிட்டபடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரம்பாக்கம் போலீசாருடன் மாணவ, மாணவியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சமாதானப்படுத்தி பள்ளிக்கு உள்ளே அனுப்பி வைத்தனர். மாணவர்களின் இப்போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu