தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்

தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்
X

கும்மிடிப்பூண்டியில் தனியார் தொழிற்சாலை முன்பு தொழிலாளர்கள் போராட்டம் செய்தனர்.

முன் அறிவிப்பு இன்றி ஆட்கள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் முன்னறிவிப்பின்றி ஆட்கள் குறைப்பில் ஈடுபட்ட தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் தொழிற்சாலை முன் வாயிலில் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதிரடியாக 13 நபர்களை முன்னறிவிப்பின்றி பணியிலிருந்து நிறுத்தப்பட்டதால் மூன்று நாட்கள் நடைபெற்ற தொடர் போராட்டத்திற்கு பின்னர் அவர்கள் மீண்டும் பணி அமர்த்தப்பட்ட நிலையில் அதேபோல் மீண்டும் திடீரென முன்னறிவிப்பின்றி 4 தொழிலாளர்களை தொழிற்சாலை நிர்வாகம் நிறுத்தியதன் விளைவாக நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலை நுழைவு வாயிலை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னறிவிப்பு மற்றும் முறையான காரணமின்றி நிறுத்தப்பட்ட 4 தொழிலாளர்களை பணியமர்த்தும் வரை போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தொழிலாளர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!