எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்

திமுக தெருமுனை கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள்.
DMK Latest News in Tamil - திருவள்ளூர் கிழக்கு மா ட்டம் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 99 - வது பிறந்தநாள் விழா மற்றும் திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனைக்கூட்டம் பூரிவாக்கம், அத்தங்கிகானூர், அழிஞ்சிவாக்கம் ஆகிய ஊராட்சிகளில் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் சத்தியவேலு தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் கலந்துகொண்டு திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனைகளை குறித்து விளக்கி சிறப்புரையாற்றினார். இதில், ஒன்றிய நிர்வாகிகள் முனிவேல், முருகன், துர்கா, சம்பத், கிளைச்செயலாளர் உதயகுமார், கவியரசன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சசிகலா உதயகுமார், மதன் (எ) சத்தியராஜ், செந்தமிழன் உட்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இறுதியில் ஒன்றிய நிர்வாகிகள் சுரேஷ் பாஸ்கர், நவமணி, ஆகியோர் நன்றி கூறினர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu