மாநெல்லூர் ஊராட்சியில் ஸ்டாலின் பிறந்த நாள் கிரிக்கெட் போட்டி

மாநெல்லூர் ஊராட்சியில் ஸ்டாலின் பிறந்த நாள் கிரிக்கெட் போட்டி
X

 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி அணிகளுக்கு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் பரிசு வழங்கினார்.

மாநெல்லூர் ஊராட்சியில் ஸ்டாலின் பிறந்த நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா கும்மிடிப் பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது மாநெல்லூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையும் பரிசு வழங்கப்பட்டது இதற்கான நிகழ்ச்சியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் கும்மிடிப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன், ஒன்றிய செயலாளர் மணிபாலன், பொறுப்புக் குழு உறுப்பினர் குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் சாரதா முத்துசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மாநெல்லூர் லாரன்ஸ், மாதர்பாக்கம் சீனிவாசன் திமுக நிர்வாகிகள் ஏசுரத்தினம், அன்பு ரமேஷ், ரஞ்சித், யுவராஜ், வடிவேலு, தேவன்பு,பாலச்சந்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி