ஸ்டாலின் 69 ஆவது பிறந்தநாள்: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ஸ்டாலின் 69 ஆவது பிறந்தநாள்: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
X

எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கொடியை ஏற்றி,  இனிப்பு வழங்கி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் 69 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பெரியபாளையத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றியம் திமுக சார்பில், தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு ஒன்றியச் செயலாளர் மூர்த்தி தலைமையில், பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகே கட்சிக் கொடியை பொதுக்குழு உறுப்பினர் ஏ.வி.ராமமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி வி.பி. ரவிக்குமார் ஆகியோர் கொடியை ஏற்றி வைத்து ஏழை எளிய பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, ஒன்றிய அவைத்தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சீனிவாசன், முன்னாள் பெரியபாளையம் ஊராட்சி மன்ற தலைவர்கள் தனசேகரன்,ராஜா, ஒன்றிய துணைச் செயலாளர் சிவாஜி, ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர் இதனை அடுத்து பெரியபாளையம் தண்டு மாநகர் பகுதியில் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் மோரை வழங்கினர்.

Tags

Next Story
ai future project