ஸ்ரீ ஜெய சக்தி அங்காள பரமேஸ்வரி, ஶ்ரீ மகா வராகி கோவில் கும்பாபிஷேகம்
கோபுர கலசங்கள் மீது சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பத்தில் அருள்மிகு ஸ்ரீ ஜெய சக்தி அங்காள பரமேஸ்வரி, ஶ்ரீ மகா வராகி கோவில் கும்பாபிஷேக திருக்குடமுழக்கு பெருவிழா விமரிசையாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ஜெய சக்தி அங்காள பரமேஸ்வரி ஸ்ரீ மகா வராகி அம்மன் திருக்கோயில் நூதன ஜீரணோதாறன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா ஆலய ஸ்தாபகர்கள் ராம்பூபதி ஏற்பாட்டில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு ஆலய வளாகத்தில் யாக சாலை அமைத்து கடந்த வியாழக்கிழமை அன்று காலை பந்தக்கால் நடவு செய்யப்பட்டு கணபதி ஹோமம், நடைபெற்றது.
தொடர்ந்து வெள்ளியன்று மகாலட்சுமி ஹோமம் கோ பூஜையுடன், கரிக்கோலம், கண் திறத்தல்,பூர்ணாஹிதி யாகசாலை அலங்கரிப்பு நிகழ்வுகளும் நடைபெற்றது. கும்பாபிஷேக நிறைவு நாளான இன்று பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேள தாளங்கள் முழங்க கோவில் சுற்றி வலம் வந்து பின்னர் கோபுர விமானங்களுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சமகாலத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தி வைத்தனர்.
தொடர்ந்து அங்கு வந்திருந்த திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் மூலவருக்கு பல்வேறு நறுமண பொருட்களோடு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்து தீப, தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும் கிராம பொது மக்களும் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu