கீழ்முதலம்பேடு ஊராட்சியில் சிறப்பு கால்நடை முகாம்: அமைச்சர் பங்கேற்பு

கீழ்முதலம்பேடு ஊராட்சியில் சிறப்பு கால்நடை முகாம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது கீழ்முதலம்பேடு ஊராட்சி. இந்த ஊராட்சியில் தமிழக கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய செயற்கை முறைக் கருவூட்டல் மற்றும் சிறப்பு கால்நடை முகாம் நடைபெற்றது. முகாமினை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் கே.ஜி.நமச்சிவாயம் முன்னிலை வகித்தார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர், கும்மிடிபூண்டி எம்எல்ஏ டிஜே கோவிந்தராஜன், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் துணை இயக்குனர் சரவணன், உதவி இயக்குனர் கோபிகிருஷ்ணா, சேர்மன் சிவகுமார் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் குணசேகரன், வட்டார வளர்ச்சி அதிகாரி நடராஜன், கால் நடை மருத்துவர்கள் சரோத்தமன், சீனிவாசன், சித்ரா, சோபனா, மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், பூவலம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் வெங்கடாஜலபதி மற்றும் திமுகவைச் சேர்ந்த மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர் .
முகாமில் கால்நடைகளுக்கு ஊட்டச்சத்துகள் கோமாரி நோய் தடுப்பூசிகள் போடப்பட்டது. நிகழ்ச்சியில் கால்நடை ஆய்வாளர் பிரபாவதி, உதவியாளர்கள் பன்னீர்செல்வம், பசுபதி, ஆறுமுகம், தனசேகர் மற்றும் ஊராட்சி செயலாளர் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக மக்கள் தொடர்பு அதிகாரி பாபு வரவேற்றார். முடிவில் சதீஷ் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu