திருவள்ளூர் மாவட்டத்தில் 4 ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியபாளையம், வடமதுரை, வெங்கல், ஆலப்பாக்கம் உள்ளிட்ட 4 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியபாளையம், வடமதுரை, வெங்கல், ஆலப்பாக்கம் உள்ளிட்ட 4 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது. பெரியபாளையத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் இலட்சுமி திருமலை தலைமை வகித்தார் துணைத் தலைவர் மகேஷ், முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் முதலமைச்சர் தேசிய ஊராட்சி வாழ்த்துமடல் கிராமசபை கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. நீடித்த இலக்குகள் குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ஆவாஸ் பிளஸ் பயனாளிகள் பட்டியல் கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது மற்றும் மாற்றுத்திறனாளிகள் வகைப்படுத்தும் (யூடி) (ஐடி) அடையாள அட்டை வழங்குதல் இடர்பாடுகளை குறித்து உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் ஊராட்சி செயலர் குமரவேல் நன்றி கூறினார்.
இதேபோல் வடமதுரை ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கோதண்டன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் ஜமுனா, ஊராட்சி துணைத் தலைவர் பாக்கியலட்சுமி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில், முதலமைச்சர் தேசிய வாழ்த்து மடல் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. பின்னர் நீடித்த இலக்குகள் குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் கல்பனா விஜயகுமார் நன்றி தெரிவித்தார்.
வெங்கல் கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி ராணி லிங்கன் தலைமையில் நடைபெற்றது இதில் ஒன்றிய குழு உறுப்பினர் திருமலை சிவசங்கரன் ஊராட்சி மன்ற துணை தலைவர் கணபதி ஊராட்சி செயலர் உமாநாத் கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆலப்பாக்கம் ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா ஆறுமுகம் தலைமை தாங்கினார் ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்வம் கிராம பொதுமக்கள் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu