பாம்பு கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கூலி தொழிலாளி பலி

பாம்பு கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கூலி தொழிலாளி பலி
X

மணிகண்டன்.

பெரியபாளையம் அருகே பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கூலி தொழிலாளி உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த அரியப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். கூலி தொழிலாளியான மணிகண்டன், இரு தினங்களுக்கு முன், தமது வீட்டின் அருகே நடந்து சென்ற போது பாம்பு கடித்து மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து அவரை மீட்ட உறவினர்கள், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். கடந்த இரு தினங்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மணிகண்டன், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!