ஆறு வழிச்சாலை: பெரியபாளையத்தில் விவசாயிகள் ஆலோசனை

திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் - முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 128 கி.மீ.தூரத்திற்கு ₹ 3200 கோடி செலவில் 6 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்க தமிழக அரசும், ஆந்திர அரசும் இணைந்து தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற முடிவு செய்துள்ளது. இதற்காக ஊத்துக்கோட்டை வட்டத்தில் மட்டும் 6 வழிச்சாலைக்காக 18 கிராமங்கள் பாதிக்கப்படுகிறது. பள்ளிப்பட்டு மற்றும் பொன்னேரி வட்டத்தில் தலா 6 கிராமங்களும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் பெரியபாளையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 2013 சட்டத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 4 மடங்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ஜி.சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர் ரவி, நிர்வாகிகள் ராஜி, வாசுதேவன், பழனி, சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக விவசாய சங்க மாநில செயலாளர் துளசி நாராயணன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வருகின்ற 16 தேதி திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து மனு கொடுப்பது, 18 தேதி நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுப்பது, 22 தேதி பெரியபாளையம் அருகே உள்ள ஆலப்பாக்கம் கிராமத்திலிரந்து ஊத்துக்கோட்டை வரையில் பிரச்சார நடைபயணம் மேற்கொள்வது, ஏப்ரல் முதல் வாரத்தில் தலைமை செயலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu