கும்மிடிப்பூண்டியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.48 லட்சம் பறிமுதல்

கும்மிடிப்பூண்டியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.48 லட்சம் பறிமுதல்
கும்மிடிப்பூண்டியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.48 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்து வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் இன்ஸ்பெக்டர் வடிவேலு முருகன் தலைமையில் ஜி.என்.டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கணபதி திரையரங்கம் அருகில் உள்ள எச் டிஎ ப்சி ஏடிஎம் வாசலில் இரண்டு பேர் பெரியபையுடன் நின்று கொண்டிருந்தனர். இதனை கண்காணித்த போலீசார் இருவரையும் சந்தேகத்தில் பேரில் விசாரித்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்கள் கையில் வைத்திருந்த இரண்டு பைகளையும் சோதனை செய்தனர். அப்போது கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது.

உடனடியாக இருவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில் இவர்கள் ஆந்திர மாநிலம் ராஜ மந்திரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 40),குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கட் பவன் (வயது 28).என்பது தெரிய வந்தது. இவர்கள் நேற்று முன் தினம் இரவு ராஜ மந்திரியில் இருந்து வரும் சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்து கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் அதிகாலை இறங்கியதும் விசாரணையில் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கொண்டு வந்த அந்தப் பணம் சென்னையில் நகை வாங்குவதற்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்தனர். இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி போலீசார் சென்னை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் ரூபாய் 48 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து பணத்தைக் கொண்டு வந்த இருவரையும் சென்னை வருமானவரித்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். இது ஹவாலா பணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story