ஆந்திராவுக்கு கடத்திச்சென்ற ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஆந்திராவுக்கு கடத்திச்சென்ற  ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்
X
பெரியபாளையம் அருகே குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் வாகன சோதனையில் ரேஷன் அரிசி பிடிபட்டது

பெரியபாளையம் அருகே குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் வாகன சோதனையில் ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 1.5டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து ஒரு நபரை கைது செய்தனர் .

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரிய பாளையத்தில் இருந்து புது வாயில் நோக்கி வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை மடக்கி சோதனை மேற்கொண்டனர். அதில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதனையடுத்து சுமார் 1.5டன் ரேஷன் அரிசியை வாகனத்துடன் பறிமுதல் செய்து ரேஷன் அரிசி ஆந்திராவுக்கு கடத்த முயன்ற யுவராஜ் என்பவரை கைது செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட ஷன் அரிசியை நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்