தண்டலம் கிராமத்தில் புதிய பள்ளி கட்டிட திறப்பு விழா:எம்.எல்.ஏ. பங்கேற்று துவக்கம்
தண்டலம் கிராமத்தில் ரூ.85 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட தண்டலம் அரசினர் உயர்நிலைப் பள்ளியை சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் திறந்து வைத்தார்.
School New Building Opening Ceremony
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தண்டலம் ஊராட்சியில் அரசினர் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் 3அடுக்குகளில் ஐந்து அறைகள் கொண்ட ஒரு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.பின்னர், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் பாதுகாப்பு கிரில் அமைக்கப்பட்டது.ரூ.85லட்சம் செலவில் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டது.இந்த கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு,பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தண்டலம் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். அனைவரையும் தலைமை ஆசிரியர் பி.எஸ்.அமுதா வரவேற்றார்.
School New Building Opening Ceremony
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன்,மாவட்ட கல்வி அலுவலர் முகமது அப்துல்லா, செயற்பொறியாளர் விஜய் ஆனந்த்,ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி ரவி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இதில்,சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும்,கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான கோவிந்தராஜன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார். இதன் பின்னர்,குத்து விளக்கு ஏற்றி பேசினார்..இந்நிகழ்ச்சியில்,பொதுக்குழு உறுப்பினர்
ராமமூர்த்தி, ரவிக்குமார்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ், ஏனம்பாக்கம் சம்பத் ,சங்கரா ஸ்ரீதர்,வக்கீல்கள் சீனிவாசன், முனுசாமி,விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராஜேஷ், கோல்டு மணி,சங்கர், சரத்குமார்,சுந்தர்,அப்புன், ஜெயலலிதா,மணிகண்டன், அப்துல்பாஷா,தயாநிதி, பொன்னப்பன்,முனிரத்தினம், ஆனந்தன்,பாஸ்கர்,சுரேஷ், கண்ணன்,பாபு,முருகன், எஸ்.முருகன் உள்ளிட்ட மாவட்ட,ஒன்றிய,பேரூர்,நகர, கிளைக் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu