செங்காளம்மன் கோவிலில் மண்டல அபிஷேகத்தின் 45-வது நாளில் சந்தன காப்பு..!
செங்காளம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யயப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன.
பெரியபாளையம் அருகே இலச்சிவாக்கம் அருள்மிகு ஸ்ரீ செங்காளம்மன் திருக்கோவிலில் மண்டல அபிஷேகத்தின் 45-வது நாளில் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே இலச்சிவாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ செங்காளம்மன் திருக்கோவில் உள்ளது.150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 11-ம் தேதி காலை மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். இதைத்தொடர்ந்து பிப்ரவரி மாதம் 12-ம் தேதி முதல் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேக விழா சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இதில்,45-வது நாளான முன்னிட்டு தண்டலம் என்.கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர் சார்பாக மண்டலபிஷேக சிறப்பு பூஜை நடைபெற்றது.இதை முன்னிட்டு மூலவருக்கு பால்,தயிர்,பன்னீர்,இளநீர், ஜவ்வாது,சொர்ணம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தனர்.இதன் பின்னர், மாலை மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.இதன் பின்னர், கண்களுக்கும்,காதுக்கும் விருந்தளிக்க கூடிய வகையில் கைலாய வாத்தியம் முழங்க கோலாட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.இதன் பின்னர், பவானி அம்மனுக்கும்,மூலவர் அருள்மிகு ஸ்ரீ செங்காளம்மனுக்கும்
மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.பின்னர், பக்தர்களுக்கு மஞ்சள்,குங்குமம்,விபூதி உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.இதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள்,விழா குழுவினர்கள்,ஊர் பெரியவர்கள்,ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu