சூதாட்ட விடுதியில் ஆறு லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் பறிமுதல், ஐந்து பேர் கைது.
சூதாட்ட விடுதியில் கைது செய்யப்பட்ட ஐந்து பேர்
ஆரம்பாக்கம் பூவலை அருகே பர்மா நகர் பகுதியில் பாலாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் எனப்படும் சூதாட்ட விடுதியில் ஐந்து பேர் கைது. 6.லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல். சூதாட்ட கிளப் உரிமையாளர்கள் ஆந்திர பதிவு எண் கொண்ட சொகுசு காரில் தப்பி ஓட்டம்.
ஆரம்பாக்கம் அருகே பூவாலை பகுதியில் உள்ள சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மாந்தோட்டம் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த மாந்தோட்டதில் ஆந்திராவைச் சேர்ந்த சிலர் மூன்று இடங்களில் மனமகிழ் மன்றம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களை மையமாகக் கொண்டு நடைபெற்று வந்த மனமகிழ் மன்றத்தில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக தொடர்ந்து எழுந்தது.
புகாரை அடுத்து காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படை காவல்துறையினர் பாலாஜி ஸ்போர்ட்ஸ் கிளப்பில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மனமகிழ் மன்றத்தில் இருந்த 6 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், மற்றும் பணம் எண்ணும் இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சூதாட்ட விடுதியில் இருந்த ஐந்து பேரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து தொழிலதிபர்கள் பலர் நூற்றுக்கணக்கான சொகுசு கார்களில் தமிழக-ஆந்திர எல்லையில் அமைந்துள்ள பாலாஜி ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கு வருவதும், வாகன வசதி இல்லாதவர்களை இலவசமாக அவர்களின் வீடுகளுக்கு சென்று அழைத்து வருவதும், அதேபோல் சூதாட்டம் முடிந்தவுடன் அழைத்துச் சென்று அவரவர் வீட்டில் விடுவதும் தெரியவந்தது
மேலும் சூதாட்டம் விளையாட வருபவர்களுக்கு அனைத்து வகையான உணவு ஏ . சிஅறை என அனைத்தும் இலவசம் என்பதும் தெரிய வந்துள்ளது. உணவு பரிமாற இளம் பெண்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது யாருக்கும் தெரியாமல் மாந்தோட்டத்தில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் பிரத்தியேக சாலை அமைத்து மூன்று கேட்டுகள் அமைத்து வழக்கறிஞர்கள் போர்வையில் குண்டர்கள் பலர் பாதுகாப்பில் ஈடுபடுவதாகவும், சிசிடிவி கேமராக்கள் அனைத்து பகுதிகளிலும் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதில் சூதாட்ட கிளப் நடத்திய உரிமையாளர்கள் யாரும் கைது செய்யப்படாத நிலையில் வேலை செய்து வந்த சிலம்பரசன் (37) சுரேந்தர் (29), தினேஷ் (28), வெங்கடேஸ்வரராவ் (37), சுரேஷ் (36) ஆகிய ஐந்து பேரை கைது செய்த ஆரம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu