பெரியபாளையம் அருகே பெட்ரோல் பங்க்கில் ரூ.2 லட்சம் கொள்ளை

பெரியபாளையம் அருகே பெட்ரோல் பங்க்கில் ரூ.2 லட்சம் கொள்ளை
X

திருடுபோன பெட்ரோல் பங்க்.

பெரியபாளையம் அருகே பெட்ரோல் பங்கில் பூட்டை உடைத்து ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த வடமதுரை பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது.

நேற்றிரவு பணியில் இருந்த சித்திரவேல், நாகலிங்கம் ஆகிய இருவரும் விற்பனையை முடித்து விட்டு கதவை பூட்டி வெளியே தூங்கியுள்ளனர். அதிகாலையில் டீசல் நிரப்ப கார் ஒன்று வந்ததால் ஊழியர்கள் எழுந்து பார்த்தபோது பெட்ரோல் பங்க்கில் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாவில் இருந்த ரூ.2.லட்சம் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும் பெட்ரோல் பங்க்கில் பொருத்துப்பட்ட கண்காணிப்பு கேமராவில் காட்சிகள் பதிவாகும் இயந்திரத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து பெட்ரோல் பங்க் மேலாளர் தனசேகரன் அளித்த புகாரின் பேரில் பெரியபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டனர்.

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியர்கள் தூங்கி கொண்டிருந்த போதே கதவை உடைத்து ரூ.1.5லட்சம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்