கும்மிடிப்பூண்டியில் ரவுடி வெட்டி கொலை இரண்டு பேர் கைது :1 நபரைத் தேடும் போலீசார்

Rowdy Murder Case 2 Persons Arrested
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த காட்டுகொள்ளை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் ( வயது 30), இவர் தற்போது திருச்சி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இந் நிலையில் நாகராஜ் 2019.ஆண்டு கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் மூன்று பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டு அதன் காரணமாக தொடர்ந்து கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்திற்கு வழக்கில் ஆஜராக இரண்டு நாட்களுக்கு முன்பாக வந்துள்ளார்.
பின்னர் சம்பவத்தன்று சிறுபுழல்பேட்டை எம்.ஜி.ஆர் நகரில் உடலில் பலத்த வெட்டு காயங்களுடன் நாகராஜ் கொலை செய்யப்பட்டு உயிரிழந்து கிடந்தார்.இது குறித்து கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் கிரியோசத்தி 2 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ரவுடி நாகராஜ் உடைய நண்பர் விவேக் - இவருடைய மனைவி சிறுபுழல்பேட்டை எம்ஜிஆர் நகர் எண்பது குறிப்பிடத்தக்கது.இதன் பின்பு விவேக் இரண்டாவது திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.இதைத் தொடர்ந்து விவேக் மனைவி அமுதா( வயது 28) அவருடைய சகோதரர்கள் 3.பேர் இடம் திருமணம் குறித்து நாகராஜ், விவேக் பேசி உள்ளனர். அப்போது திடீரென இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது அதில் விவேக் தப்பி ஓடினார்.ஆனால் ரவுடி நாகராஜ் அவர்களுடன் சண்டையிட்டுள்ளார்.
அப்போது அமுதாவுடைய சகோதரர்கள் கிருஷ்ணன், சாம்பசிவம், கருணா ஆகியோர் நாகராஜை சரமாரியாக வெட்டியும் முகத்தில் கல்லை போட்டு தாக்கியும் கொலை செய்துவிட்டு தப்பியது தெரிய வந்தது.சிப்காட் போலீசார் சாம்பசிவம் தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் பின்தொடர்ந்தனர்.
கும்மிடிப்பூண்டி ரயில் அருகே சாம்பசிவம், கருணாவை கைது செய்து சிப்காட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu