பெரியபாளையத்தில் பூட்டிய வீட்டில் பணம் மற்றும் தங்க நகை கொள்ளை

பெரியபாளையத்தில்   பூட்டிய  வீட்டில்  பணம் மற்றும் தங்க நகை கொள்ளை
X

கொள்ளை நடந்த வீடு.

பெரியபாளையத்தில் பூட்டிய வீட்டில் பணம் மற்றும் தங்க நகை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயியான பிரதீஷ்(வயது35 ). சொந்த வேலையாக இவர் தமது குடும்பத்தினருடன் ஹைதராபாத் சென்று விட்டு இன்று மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 20 சவரன் நகை, 30 ஆயிரம் ரொக்கம், 5 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்தது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 15லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story