டாஸ்மாக் சுவற்றில் ஓட்டையிட்டு 33 மதுபாட்டில்கள் கொள்ளை: மர்ம நபர்கள் துணிகரம்

டாஸ்மாக் சுவற்றில் ஓட்டையிட்டு 33 மதுபாட்டில்கள் கொள்ளை: மர்ம நபர்கள் துணிகரம்
X

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மதுபான கடை சுவற்றில் துளையிட்டு ரூ. 6140 மதிப்பிலான 33 மதுபாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களுக்கு கும்மிடிபூண்டி போலீசார் வலைவீச்சு.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ரெட்டம்பேடு, வலை கொண்டு ஆகிய 2 கிராமங்களுக்கு இடையே 2 வருடங்களாக அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த மதுபான கடை 2 கிராமங்களுக்கும் சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில் உள்ளதால் இந்த சூழலை பயன்படுத்தி கடையின் சுவற்றை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கடையில் 6140 மதிப்பிலான 33 மதுபாட்டில்களை திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கும்மிடிப்பூண்டி சரக எல்லை துணை கண்காணிப்பாளர் ரமேஷ் மற்றும் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.




Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி