பாகல்மேடு பகுதியில் சாலையோரம் உள்ள வீடுகள் அகற்றம்

பாகல்மேடு பகுதியில் சாலையோரம் உள்ள வீடுகள் அகற்றம்
X

பாகல்மேடு பகுதியில் சாலையோரம் உள்ள வீடுகளை, வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.

பாகல்மேடு பகுதியில் சாலையோர வீடுகள் அகற்றப்பட்ட நிலையில், மாற்று இடம் தர, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த பாகல்மேடு பகுதியில், சாலையோரம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர். பாகல்மேடு பகுதியில் சாலையோரம் குடிசைகள், அமைத்து ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன. அவற்றை அகற்ற முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில், வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க ஏராளமான போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் கூறுகையில், நாங்கள் காலங்காலமாக வீடுகளை கட்டி வசித்து வருகிறோம். வீடு இடிக்கப்பட்ட நிலையில், மாற்று இடம் தந்து அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
ai marketing future