டேங்கர் லாரி மோதி ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை ஊழியர் பலி

டேங்கர் லாரி மோதி ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை ஊழியர் பலி
X
ஊத்துக்கோட்டையில் டேங்கர் லாரி மோதி ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை ஊழியர் உடல் நசுங்கி பலியானார்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சேர்ந்த ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை ஊழியரான டாமிஸ் காவியோ இவர் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க ஊத்துக்கோட்டை பஜார் பகுதிக்கு தனது சைக்கிளில் சென்று பொருட்களை வாங்கி வீடு திரும்பும்போது சென்னை நோக்கி சென்ற கேஸ் டேங்கர் லாரி மோதி அவர் மீது ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார் தகவல் அறிந்து விரைந்து வந்த ஊத்துக்கோட்டை போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து டேங்கர் லாரி ஓட்டுநர் லோகநாதன் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி