ரயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்புகளை அகற்ற வருவதை அறிந்த மக்கள் சாலை மறியல்

ரயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்புகளை அகற்ற வருவதை அறிந்த மக்கள் சாலை மறியல்
X

கும்மிடிப்பூண்டி இரயில்வே இடத்தில் குடியிருப்பு பகுதிகளை ரயில்வே நிர்வாகம் அகற்றுவதை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Residences To Be Removed People Blocked The Road கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் மேம்பாட்டு பணிகளுக்காக அருகில் உள்ள குடியிருப்புகளை அகற்ற வருவதை அறிந்த பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

.Residences To Be Removed People Blocked The Road

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ரயில்நிலையமானது தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள பெரிய ரயில் நிலையமாகும்.
இந்த ரயில் நிலையத்தை கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஆத்துப்பாக்கம், மாதர்பாக்கம், கண்ணன்கோட்டை, கரடிபூத்தூர், ஐய்யர் கண்டிகை, கெட்டனமல்லி, பூவலம்பேடு, பூவலை, செதில்பாக்கம், சுண்ணாம்பு குளம் உள்ளிட்ட 81கிராம மக்கள் மட்டுமல்லாது, கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டைக்கு வந்து போகும் 50. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய முக்கிய ரயில் நிலையம் போதிய வசதிகள் இல்லாமல் இருக்கும் நிலையில், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினர் தென்னக ரயில்வேக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் மற்றும் ரயில்வே கட்டுமான பொறியாளர் ஸ்ரீவித்யா உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் தனி பெட்டிகள் கொண்ட ரயிலில் கடந்த மார்ச் 27.ஆம் தேதி கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் முழுவதும் ரயில் நிலையத்தை மேம்படுத்த ஆய்வு செய்தனர்.
அதன்படி 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில்நிலையத்தில் உள்ள நான்கு நடைமேடைகளை இணைக்கும் வகையில் லிப்ட் வசதியுடன் நடைபாலம், எக்ஸ் லேட்டர், பார்க்கிங் வசதி, சாலை, கழிப்பறை, புக்கிங் சென்டர், தானியங்கி டிக்கெட் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்ய திட்டமிடப்பட்டது.ஆனால் ரயில்வே இடத்துக்குட்பட்ட இருபுறமும் பல குடியிருப்புகளும் கடைகளும் உள்ளது இதனை அகற்ற கோரி ரயில்வே நிர்வாகம் முறையாக நோட்டீஸ் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர்,சட்டமன்ற உறுப்பினர் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் இதற்கு மாற்று இடம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந் நிலையில் ஜனவரி நேற்று கும்மிடிப்பூண்டி பைபாஸ் ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதி மற்றும் கடை மற்றும் டிக்கெட் கவுன்டர் பகுதியில் உள்ள குடியிருப்பு காலி மனைகளை அகற்ற பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
இதனை அறிந்த மேற்கண்ட பகுதி மக்கள் 70-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதை அறிந்த கும்மிடிப்பூண்டி போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அரை மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தி இது சம்பந்தமாக பொதுமக்கள் எங்களுக்கு போதிய அவகாசம் தேவைப்படுகிறது தமிழக அரசு மாற்று இடம் வழங்கிய பின்னர் நாங்கள் காலி செய்கிறோம் என கூறினர்.
அதற்கு ரயில்வே அதிகாரிகள் இது சம்பந்தமாக பலமுறை நோட்டீஸ் அளிக்கப்பட்டது. குடியிருப்பு பகுதிகளை காலி செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர் இதனால் ஆம்ப்ரத் திட்டம் தோய்வடைந்துள்ளது என கூறினர்.தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் கும்மிடிப்பூண்டி போலீசார் அனைத்து பெண்களையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து மாலை விடுவித்தனர். இந்த சம்பவம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!