மாட்டு கொட்டகை ஆக மாறிய பேருந்து நிழற்குடையை சீர் செய்து தர கோரிக்கை

மாட்டு கொட்டகை ஆக மாறிய பேருந்து நிழற்குடையை சீர் செய்து தர கோரிக்கை
X

பேருந்து நிழற்குடையில் கட்டப்பட்டுள்ள மாடு.

திருவள்ளூர் அருகே மாட்டு கொட்டகை ஆக மாறிய பேருந்து நிழற்குடையை சீர் செய்து தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் கிராமத்தில் மாட்டு கொட்டகை போல் மாறிய பேருந்து நிழற் குடையை சீர் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் திருக்கண்டலம் ஊராட்சியில் சுமார் 5000.க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அரசு பள்ளி அருகே பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் நிழற் குடை ஒன்று உள்ளது. இந்த நிழற் குடையானது சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடமாகும். பழைய கட்டிடம் என்பதால் மேற்கூறையில் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து, அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிந்த படி ஆபத்து விளைவிக்கும் வகையில் காட்சியளிக்கிறது. இந்தக் கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பேருந்து நிழற்குடை ஆபத்தான நிலையில் இருப்பதால் மக்கள் அங்கு வந்து நின்று பேருந்துக்காக காத்திருப்பதையே தவிர்த்து வருகிறார்கள். எந்த நேரம் கூரை இடிந்து விழுமோ என்ற அச்சம் இருப்பதே இதற்கு காரணமாகும்.

தற்போது இந்த பயணியர் நிழற்குடையில் பகுதியை சேர்ந்த சிலர் தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளான ஆடு, மாடு உள்ளிட்டவை கட்டி வருகின்றனர். இதனால் அது மாட்டுத்தொழுவம் போல் காப்படுகிறது.

எனவே இனியாவது சம்பந்தப்பட்ட நிர்வாகம் கண்டுகொண்டு பழுதடைந்த இந்த பேருந்து பயணியர் நிழற்குடையை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai solutions for small business