கவரப்பேட்டையில் மேம்பாலம் பணிகள் விரைந்து முடிக்க கோரிக்கை!
மழைநீர் வெள்ளத்தில் செல்ல வாகன ஓட்டிகள் தடுமாற்றமடைகின்றனர்.
கவரப்பேட்டையில் சர்வீஸ் சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவ்வழியாக செல்ல அவதிப்படுகின்றனர். விரைந்து மேம்பாலம் பணிகளை முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கவரப்பேட்டை சென்னை- கொல்கத்தா தேசிய சாலையில் நாள்தோறும் ஆந்திரா, தெலுங்கானா, ஓடிஸா,ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், கொல்கத்தா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் அதேபோல் சென்னையில் இருந்து நாள்தோறும் இவ்வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் சாலை பணிகள் முடிந்து வாகனங்கள் சென்று வந்த நிலையில் சக்திவேடு-கவரப்பேட்டை சாலையில் மேம்பாலம் பணிகள் 5.வருடங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த நிலையில்.தற்போது தற்போது மேம்பாலம் சாலை இணைக்கும் விதமாக ஏற்கனவே பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்ட சாலையை அகற்றி மீண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால் நாள்தோறும் இவ் வழியாக செல்லும் இருசக்கர, நான்கு சக்கர, கனரக வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் சர்வீஸ் சாலையில் சென்று வருவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். சமீபத்தில் பெய்த 2 மணி நேரம் மழைக்கு கவரப்பேட்டை சர்வீஸ் சாலையில் மழைநீர் தேங்கி நின்று குளம் போல் காட்சி அளித்தது.
மேலும் மழைநீர் செல்லும் வடிகால் கால்வாய் அடைப்பு ஏற்பட்டதால் மழை தண்ணீர் வெளியேற்ற முடியாமல் சாலையில் தேங்கி நின்றது.பல்வேறு இடங்களில் பெரிய அளவில் பள்ளங்கள் உள்ள நிலையில் வாகன ஓட்டிகள் சாலை கண்டுபிடித்து வாகனங்கள் இயக்க மிகவும் சிரமப்பட்டனர். இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஊர்ந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் இப்பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu