ஆரணியில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி

ஆரணியில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி
X

ஆரணியில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. 

ஆரணியில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நிவாரணம் பொருட்கள் வழங்கப்பட்டது.

பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது இதனை அடுத்து மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டு வரும் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதி மக்களுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பல்வேறு உதவிகள் செய்தது. இந்த நிலையில். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி பெரியபாளையம் அருகே அமைந்துள்ள ஆரணி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மிம்ஜாம் புயல் நிவாரணமாக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பொன்னேரி வட்டக்கிளை சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி, பேரூராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வட்டக்கிளை செயலாளர் சித்ரா தலைமை தாங்கினார். சேர்மன் கோபால் முன்னிலை வகித்தார். துப்புரவுபனி மேற்பார்வையாளர் ஹரிபாபு அனைவரையும் வரவேற்றார்.பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் கண்ணதாசன்,ரகுமான் கான், சதீஷ் மற்றும் இளநிலை உதவியாளர் குப்பன்,வரி தண்டலர் ரங்கநாதன் உட்பட பேரூராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story
ai healthcare products