பெரியபாளையம் அருகே 4 அடி நல்லப்பாம்பை மீட்டு வனப்பகுதியில் விடுவிப்பு

பெரியபாளையம் அருகே 4 அடி நல்லப்பாம்பை மீட்டு வனப்பகுதியில் விடுவிப்பு
X
தீயணைப்புத்துறையினரால் மீட்கப்பட்ட நல்லபாம்பு.
வீட்டின் அருகே 4 அடி நீளமுள்ள நல்லப் பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ராள்ளபாடி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் கூலித்தொழிலாளி. இவரது வீட்டின் அருகே வீடு கட்டுவதற்காக மணல் கொட்டி வைத்திருந்தார்.

அந்த மணல் அருகே உள்ள வலை ஒன்றில் 4.அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக தேர்வாய் சிப்காட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மணல் திட்டிலுள்ள வலையில் இருந்த பாம்பை கருவி கொண்டு பிடித்து பத்திரமாக எடுத்துச்சென்று வனப்பகுதியில் பகுதியில் விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story