கும்மிடிப்பூண்டி: ரயில்வே தண்டவாளம் பகுதியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

கும்மிடிப்பூண்டி: ரயில்வே தண்டவாளம் பகுதியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
X

கும்மிடிப்பூண்டி காவல் நிலையம் (பைல் படம்)

கும்மிடிப்பூண்டி அருகே முனுசாமி நகர் ரயில்வே தண்டவாளம் பகுதியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த முனுசாமி நகர் ரயில்வே தண்டவாளம் பகுதியில் கஞ்சா கடத்துவதாக கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலிசார் அங்கு 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களிடமிருந்து சுமார் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!