கும்மிடிப்பூண்டி அருகே காணாமல் போன சிறுவனை மீட்க போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கும்மிடிப்பூண்டி அருகே   காணாமல் போன சிறுவனை மீட்க   போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட பொதுமக்கள்
X

சிறுவன் கடத்தல் தொடர்பாக நடவடிக்கை கோரி  போலீஸ்ஸ்டேஷனை முற்றுகையிட்ட பொதுமக்கள் 

Public Siege Struggle கும்மிடிப்பூண்டி அருகே பல்லவாடா கிராமத்தில் நான்காம் வகுப்பு பள்ளி மாணவன் கடத்தல் .. காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Public Siege Struggle

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தில் சுமார் 1500.க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் .இதே கிராமத்தை சேர்ந்த தனியார் தொழிற்சாலை ஊழியர் சுரேஷ் - சிந்துமதி தம்பதியர். இவர்களது மகன் அனீஸ்(வயது 8). இவர் நேற்றுமுன்தினம் மாலை 6 மணி அளவில் காணாமல் போன நிலையில் அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு ஆய்வு மேற்கொண்டதில் அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சிறுவனை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் சிறுவனை அழைத்துச் சென்றதாக கூறப்படும் பெண்ணை பாதிரிவேடு காவல் நிலைய போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிறுவன் நேற்று முன்தினம் மாலை காணாமல் போன நிலையில் போலீசார் சிறுவனை மீட்பதில் அலட்சியம் காட்டுவதாக கூறிய அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கும்மிடிப்பூண்டி காவல் சரக எல்லைக்குட்பட்ட பாதிரிவேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

தொடர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் உறவினர்களிடம் டிஎஸ்பி கிரியோ சக்தி பேச்சு வார்த்தை நடத்தி னார். முதல் கட்ட விசாரணையில் நான்காம் வகுப்பு படிக்கும் அனீஸ் நேற்று மாலை சுமார் 7 மணி அளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டி செல்லும் நாயுடு குப்பம் பெட்ரோல் பங்க் அருகே ஆட்டோ மோதி இருசக்கர வாகனம் ஒன்று கீழே கவிழ்ந்துள்ளது அவ்வழியாக வந்த பல்லவாடா கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் காணாமல் போன சிறுவன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இருந்ததை பார்த்துள்ளார் .

இது சம்பந்தமாக அந்த பெண்ணிடம் எங்கு செல்கிறது என்று கேட்டபோது நாங்கள் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வரப் போகிறேன் என கூறிவிட்டு சென்றுவிட்டார் ஆனால் போலீசார் அந்தப் பெண்ணை பிடித்து விசாரணை செய்த போது நான் சிறுவனை கடத்தவில்லை என சொல்லியுள்ளார். ஆனால் போலீசார் மேற்கண்ட தொலைபேசி எண்களை திருவள்ளுவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர் .அதன் பின்பு தொலைபேசி எண்ணில் யார் யார் தொடர்பு கொண்டு உள்ளார்கள் என விவரங்களை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .சிறுவன் ஆந்திர மாநிலத்தை நோக்கிதான் கடத்தப்பட்டு இருக்கலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த சம்பவம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
ai healthcare products