கும்மிடிப்பூண்டி அருகே மின் தகன மேடை அமைக்க எதிர்ப்பு.

கும்மிடிப்பூண்டி அருகே மின் தகன மேடை அமைக்க எதிர்ப்பு.
X
ஒரு பிரிவினர் பயன்படுத்தி வந்த சுடுகாட்டில் பேரூராட்சி நிர்வாகம் மின் தகன மேடை அமைக்க மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் பொதுமக்கள் அதிருப்தி

கும்மிடிப்பூண்டி அருகே மின் தகன மேடை அமைக்க எதிர்ப்பு, ஒரு பிரிவினர் பயன்படுத்தி வந்த சுடுகாட்டில் பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் பொதுமக்கள் அதிருப்தி, பாமக ஆதரவுடன் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு,

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஜெயஸ்ரீ நகரில் 54 சென்ட் பரப்பளவில், ஒரு பிரிவினர் மட்டும் கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் சுடுகாடு உள்ளது. இங்கு மற்ற பிரிவினரும் இறந்தவர்களின் உடலை தகனம் செய்யும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மின் தகன மேடை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியதை அறிந்து, அங்கு திரண்ட ஒரு பிரிவு மக்கள் மின் தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றினர். இதனால் அதிருப்தி அடைந்த பாதிக்கப்பட்ட மக்கள் கைகளில் கருப்பு கொடி ஏந்தி ஊர்வலமாகச் சென்று மின் தகன மேடை அமைக்கும் இடத்தை முற்றுகை இட்டு, கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக அந்த இடத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தை மண்ணை கொண்டு மூடவும், குவித்து வைக்கப்பட்டிருந்த கட்டுமான பொருட்களை அகற்றவும் முயன்றனர்.

அப்போது காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும், இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹரி குமார் நடத்திய பேச்சு வார்த்தையில் மாவட்ட ஆட்சியர் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என முடிவானதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவுடன் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்தப் போராட்டத்தால் பதற்றமும் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil