Public Demand Land Return Agitation சர்க்கரை ஆலைக்கு அளித்த நிலத்தை சிப்காட்டிற்கு ஒப்படைக்க எதிர்ப்பு பொதுமக்கள் முற்றுகை
கும்மிடிப்பூண்டியில் சர்க்கரை ஆலையை சிப்காட்டிற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து நிலம் தந்தவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
Public Demand Land Return Agitation
புதுவாயல் பகுதியில் சர்க்கரை ஆலைக்காக அப்பகுதியை சேர்ந்த நிலத்தை வழங்கியவர்கள் அந்த நிலத்தை சிப்காட்டிற்கு மாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி,புதுவாயலில் சர்க்கரை ஆலை அமைக்க அப்பகுதியை சார்ந்த 72 பேர் 1992ஆம் ஆண்டு 78.34ஏக்கர்72. பேருக்கு சொந்தமான நிலத்தை வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு என்றும், 1சென்ட் 1400.ரூபாய்க்கு என்றும் தந்துள்ளனர்.
மேலும் ஆலை துவங்க பங்கு தொகை செலுத்தியும் அனைவரும் பங்குதாரர்களாக மாறி உள்ளனர்.இந் நிலையில் கடந்த 31ஆண்டுகளாக சர்க்கரை ஆலை துவக்கப்படாத நிலையில், சர்க்கரை ஆலைக்காக தந்த நிலத்தை தங்களுக்கே திருப்பி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.இதனை அடுத்து சர்க்கரை ஆலைக்கு புதுவாயல் பகுதி மக்கள் தந்த நிலத்தை சிப்காட்டிற்கு தமிழக அரசு ஒப்படைத்தது.
தொடர்ந்து நிலத்தை வருவாய் துறையினர் வட்டாட்சியர் பிரீத்தி தலைமையில், கும்மிடிப்பூண்டி ஆய்வாளர் வடிவேல் முருகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புடன் அளவீடு செய்ய வந்தனர்.இதனை அறிந்த நிலத்தை தந்த அப்பகுதி மக்கள் புதுவாயல் கிராம தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட நிலம் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தலைமையில் வருவாய் துறையினரை முற்றுகையிட்டனர்.
அப்போது அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவிக்கையில்
இங்கு சர்க்கரை ஆலை அமைக்கப்படும் என்றும் , இதில் நிலம் தந்த வீட்டிற்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு தருவதாக அரசு நிர்வாகத்தின் உறுதியின் பேரில் 1992ஆம் ஆண்டு வெறும் சென்ட் 1400.ரூபாய்க்கு நிலத்தை தந்தோம். இப்போது 31ஆண்டுகள் கழித்து சர்க்கரை ஆலை செயல்படாது என அரசு கூறியள்ளது.இந்த நிலையில் இந்த நிலத்தை சிப்காட்டிற்கு தராமல், நிலத்தை இழந்த விவசாயிகளுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.சம்பவ இடம் விரைந்த திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்ககுனர் மலர்விழி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி ஆகியோர் முற்றுகை இட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியபோது, பொதுமக்கள் நிலத்தை தங்களிடமே திரும்ப வழங்க வேண்டும், இன்றைய சந்தை மதிப்பீட்டில் தங்கள் நிலத்திற்கான விலையை தந்து நிலத்தை கையகப்படுத்தி கொள்ளட்டும் அதுவரை நிலத்தை அளவீடு செய்யக்கூடாது என வலியுறுத்தினர்.அவர்களிடம் பேசிய திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் பொதுமக்கள் தந்த கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் தந்து இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.பின்னர் கூட்டம் கலைந்து சென்றனர். இந்த முற்றுகைப் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu