பழைய டயர் கம்பெனியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
டயர் அரைக்கும் நிறுவனத்தை அப்பகுதியிலிருந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள்.
Public Agitation For Tyre Factory Closure
கும்மிடிப்பூண்டி அருகே காரம்பேடு, சித்தூர் நத்தம் பகுதியிலுள்ள பழைய டயர்களை எரிக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துகள்களால் மூச்சு திணறல் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய போது மூன்று பேருக்கு மயக்கம்யஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சியில் 2.ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.இங்கு பெரும்பாலான கிராமப்புற மக்கள் விவசாயம், துணி நெய்தல் உள்ளிட்ட வேலைகளை நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர்..இந்த நிலையில் ஊராட்சிக்குட்பட்ட காரம்பேடு, சித்தூர் நத்தம் பகுதியில் இரும்பு உருக்காலை மற்றும் லாரிகளுக்கு பயன்படுத்தப்படும் பழைய டயர்களை அரைக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது .
இதையொட்டியுள்ள கிராமப்புற மக்கள் மேற்கண்ட தொழிற்சாலையிலிருந்து வரும் அதிக கரும் புகையும், அத்தோடு நச்சுத்தன்மை வாய்ந்த கெமிக்கல் காற்றில் கலப்பதால் அப் பகுதியில் இருமல், சுவாச கோளாறு, மூச்சுதிணறல், புற்றுநோய்,உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகியும் அத்தோடு பழைய டயர்களில் தேங்கி நிற்கும் மழை நீரால் அதிக அளவில் டெங்கு கொசு உற்பத்தியாகி அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளை கடிப்பதால் பல்வேறு வகையான மர்ம காய்ச்சலும் வருவதாகவும் அப்பகுதி வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து மேற்கண்ட பகுதியில் பழைய டயர்களை கும்மிடிப்பூண்டி, சென்னை, ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி, செங்கல்பட்டு, செங்குன்றம், ஆகிய பல்வேறு பகுதிகளிலிருந்து தினந்தோறும் பத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் பழைய டயர்களை கொண்டு வந்து அதனை அரைத்து மூலக்கூறுகளாக தயார் செய்கின்றனர்.
ஏற்கனவே இந்த பழைய டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இருந்து கண்ணுக்குத் தெரியாமல் துகள்கள் வெளியேறி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் கிராமப்புற மக்கள் வாழும் இடங்களில் பரவி மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.இது சம்பந்தமாக துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தொழிற்சாலையில் இரண்டாவது பிளான்ட் மூன்று நாட்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டுள்ளது.
இதனால் டயரில் அரைக்கும் பொழுது அதிலிருந்து வெளியேறும் கருப்புத் துகள்களும் கெமிக்கல்களும் சாலையில் செல்லும் பொழுதும் கிராமப் பகுதிகளில் பரவியது இதனால் அங்குள்ள குழந்தைகளுக்கு இருமல் ஏற்பட்டு கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை மற்றும் தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையறிந்த கிராமப்புற மக்கள் ஒன்றிணைந்து 50க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலையை முற்றுகையிட்டு அதன் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியோசக்தி பாதிரிவேடு சப்இன்ஸ்பெக்டர் வினோத்குமார் மற்றும் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் போது பொதுமக்கள் தொழிற்சாலை அருகே சென்று பாருங்கள் மூச்சு விட கூட முடியாமல் துகள்கள் வெளியேறுகிறது என்பதை நீங்களே அறிவீர்கள் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் நிர்வாகத்திடம் போலீசார் பேசி புதிதாக தொடங்கப்பட்ட இரண்டாவது பிளான்டை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டனர். இதன் பின்பு நிர்வாகம் நிறுத்திவிட்டது அதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது சம்பந்தமாக பொதுமக்கள் கூறுகையில் மேற்கண்ட தொழிற்சாலை மீது மாசு கட்டுப்பட்டு வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் ஆய்வு செய்யவும் புகார் அளிக்கப்படும் என தெரிவித்தனர். இதில் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மிகப் பெரும் அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu