இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
X

இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளர் சத்தியவேல் வழங்கிய போது.

கன்னிகைப்பேர் ஊராட்சியில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை ஒன்றிய செயலாளர் சத்தியவேல் வழங்கினார்.

பெரியபாளையம் அருகே எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கன்னிகைப்பேர் ஊராட்சியில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ. சத்தியவேலு வழங்கினார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் கன்னிகைப்பேர் ஊராட்சியில் உள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ் ஏற்பாட்டில் நேற்று கன்னிகைப்பேர் கிராமத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆ. சத்திய வேலு கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களுக்கு கிரிக்கெட் பேட், பந்து உள்ளிட்ட அடங்கிய விளையாட்டு உபகரணங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி கே.வி.வெங்கடாசலம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், திமுக நிர்வாகிகள் நீதி(எ) செல்வகுமார், சீமான்,விஜய்,மணிவாசகம்,வினோத்,ரஜினி, கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Next Story
why is ai important in business