கும்மிடிப்பூண்டியில் கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்

கும்மிடிப்பூண்டியில் கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்
X
கஞ்சா வியாபாரிகளை கைது செய்யக்கோரி கும்மிடிப்பூண்டியில் சாலை மறியல் போராட்டம் நடத்தியவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கும்மிடிப்பூண்டியில் கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா புகைப்பவர்கள் அவ்வப்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் பள்ளிக்கு தமது குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்ற ஆனந்தன் என்ற கூலி தொழிலாளியை மடக்கி கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு தாக்கியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மேட்டுக்காலனி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கஞ்சா புகைப்பவர்கள் பொதுமக்களை பணம் கேட்டு தகராறில் ஈடுபடுவது வாடிக்கையாக நடந்து வருவதாகவும், காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை என குற்றம் சாட்டினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி போலீசாரிடம் குற்றவாளிகளை கைது செய்யாதது ஏன் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் சமரசம் பேசிய காவல்துறையினர் விரைவில் கைது செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!