கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
X

கோப்புப்படம் 

ரயில்வே இடத்தில் வீடு கட்டி வசித்து வரும் மக்களை அவகாசம் கொடுக்காமல் காலி செய்யுமாறு அதிகாரிகள் கூறியதால் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கும்மிடிப்பூண்டி ரயில்வே இடத்தில் வீடு கட்டி வசித்து வரும் மக்களை அவகாசம் கொடுக்காமல் காலி செய்யுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டதால், ஆத்திரமடைந்த மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தால் பரபரப்பு.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 200.க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த சுமார் 1300க்கும் மேற்பட்ட மக்கள் கடந்த 60. ஆண்டுகளுக்கு மேலாகவே வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் வசதி, ரேஷன் அட்டை உள்ளிட்ட அரசு வழங்கும் அனைத்து அட்டைகள் வைத்துள்ளனர். இந்நிலையில்.இந்த இடங்களில் ரயில்வே விரிவாக்க பணிகளை மேற்கொள்ள நிலத்தை காலி செய்யுமாறு கடந்த 10.நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

சுமார் 60 ஆண்டு காலம் மேலாகவே குடியிருந்து வரும் இப்பகுதி மக்கள் தங்களுக்கு போதிய அவகாசம் வேண்டும் என்று கூறி சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் சந்தித்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மீண்டும் அதிகாரிகள் போதிய கால அவகாசம் வழங்காமல் முன்னறிவிப்பு ஏதுமின்றி காலி செய்யுமாறு கூறியதை அடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுக்கு மாற்று இடமும் போதிய அவகாசம் வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ப்ரீத்தி பொதுமக்களிடையே சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் சுமார் 60 ஆண்டு காலமாக அந்த இடத்தில் வசிப்பதாகவும், அரசு வழங்கிய அனைத்து சலுகைகள் பெற்றுள்ளோம் என்று பேரூராட்சியில் வீட்டு வரி கட்டி வருவதாகவும், இத்தனை ஆண்டு காலம் வாழ்ந்து வந்ததாகவும். தாங்கள் குழந்தைகளுக்கு பள்ளிகளுக்கு கல்லூரிகளுக்கு செல்ல பேருந்து நிலையம் ரயில் நிலையம் ஏதுவாக அமைந்துள்ளதாகவும். மேலும் மாற்று இடம் இல்லாததால் தாங்கள் எங்கு செல்வது என்று மன உளைச்சலில் இருப்பதாகவும் கூறினர். எனவே அரசு தங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும், மாற்று இடத்தையும் ஒதுக்கீடு செய்து வீடு கட்டி தர வேண்டும் என்று கூறினர்

இதற்கு தீர்வு காணப்படும் என்று வட்டாட்சியர் பிரீத்தி உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது

Tags

Next Story
ai solutions for small business