கும்மிடிப்பூண்டி அருகே தனியார் நிறுவன அதிகாரி கொலை வழக்கில் 4பேர் கைது
கொலை செய்யப்பட்ட மாரிமுத்து மற்றும் கைது செய்யப்பட்ட நால்வர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பைபாஸ் பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்தவர் மாரிமுத்து(25).இவர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் அசிஸ்டன்ட் மேனேஜர் ஆக பணிபுரிந்து வந்தார். இவருடைய சொந்த ஊர் மதுரை.
கடந்த மே 25 ம்தேதியன்று தொழிற்சாலை நிர்வாகத்தில் நான் சொந்த ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் மாரிமுத்து 3 நாட்களாகியும் வீடு திரும்பாத காரணத்தினால் அவருடைய அண்ணன் திருமலை கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் மாரிமுத்து காணவில்லை என புகார் மனு அளித்தார்.
புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் சுமார் 10 பேர் கொண்ட குழு விசாரணையில் மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து மாரிமுத்து செல்போன எண்ணை வைத்து கடைசியாக திருநெல்வேலி மாவட்டத்தில் சிக்னல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் விசாரணை மேற்கண்ட போலீசார் திருநெல்வேலிக்கு விரைந்துள்ளனர்.
விசாரணையில் ஏற்கனவே மாரிமுத்து திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ராகினி என்ற இளம்பெண்ணுடன் பழகி வந்தது தெரியவந்தது. அத்தோடு ராகினிக்கு மாரிமுத்து 5 லட்சம் பணம் கொடுத்துள்ளார். ஆனால் ராகினி வேறு ஒரு இளைஞருடன் பழகி உள்ளார்.
ஒரு கட்டத்தில் ராகினியின் உறவினர்கள் மதுரைக்குச் சென்று மாரிமுத்து அடிக்கடி தொலைபேசியில் தொந்தரவு செய்கிறார் என தகராறு செய்துள்ளனர். அத்துடன் அவரும் நிறுத்திவிட்டார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு மாரிமுத்து அடிக்கடி தொலைபேசியில் கொடுத்த பணத்தைப் பற்றி கேட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ராகினியின் நண்பர்களான திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளவரசி, இசக்கி ராஜா, ரவிக்குமார், வில்வதுரை(காவலர்) , ஆகியோர் உதவியுடன் மேற்கண்ட தேதியில் மாரிமுத்துவை வரவழைத்து சங்கரன்கோவில் அருகே கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
அதன் பின்னர் கொலை செய்யப்பட்ட மாரிமுத்துவை கோணியில் கட்டி விருதுநகர் மாவட்டம் கண்மாயில் போட்டுவிட்டு தப்பி ஓடியது தெரிய வந்தது. கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் அதிரடியாக மேற்கண்ட 4 நபர்களை கைது செய்து மாரிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu