தனியார் அறக்கட்டளை சார்பில் துப்புரவு தூய்மை காவலர்களுக்கு பொங்கல் பரிசளிப்பு

தனியார் அறக்கட்டளை சார்பில் துப்புரவு தூய்மை காவலர்களுக்கு பொங்கல் பரிசளிப்பு
X
துப்புரவு தூய்மை காவலர்களுக்கு 5 கிலோ அரிசி, 2 கிலோவெல்லம், 2 கிலோ பருப்பு, முந்திரி, திராட்சை தொகுப்பு வழங்கப்பட்டது

சாய் தர்ஷன் அறக்கட்டளை சார்பில் துப்புரவு தூய்மை காவலர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகாபுரம் ஊராட்சியில் இயங்கி வரும் ஸ்ரீ சாய் தர்ஷன் அறக்கட்டளையின் சார்பில் தலைவர் குருமாயி சாந்த் அம்மாள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சிகளை சேர்ந்த துப்புரவு தூய்மை காவலர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 கிலோ அரிசி 2 கிலோ வெல்லம் 2 கிலோ சிறுபருப்பு முந்திரி திராட்சை அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக சங்கரா கண் மருத்துவமனையின் மேலாளர் வி.சங்கர், ரோட்டரி கிளப் சேர்ந்த திருமதி சரஸ்வதி ராமதாஸ், ராமதாஸ், கிராம நிர்வாக அலுவலர் கல்பனா, ஊராட்சி மன்ற தலைவர் தேவகி தங்க பிரகாசம், மாம்பளம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கனகலட்சுமி சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு 50 துப்புரவு தூய்மை காவலர்களுக்கு சீருடை மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினர். ஏற்பாடுகளை, நிர்வாகிகள் திவ்யா கண்ணன், கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.முடிவில் ஊராட்சி செயலர் உமாபதி நன்றி கூறினார்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!