கன்னிகைபேரில் சமத்துவ பொங்கல் வைத்து விளையாட்டுப் போட்டிகள்

கன்னிகைபேரில் சமத்துவ பொங்கல் வைத்து விளையாட்டுப் போட்டிகள்
X

திருவள்ளூர் மாவட்டம்,எல்லாபுரம் ஒன்றியம்,கன்னிகைபேர் எம்.ஜி.ஆர் நகரில் நடந்த சமத்துவ பொங்கல்.

கன்னிகைபேரில் பொங்கலை முன்னிட்டு சமத்துவ பொங்கலுடன் விளையாட்டுப்போட்டிகள் நடத்தி கொண்டாடினர்.

கன்னிகைபேர் எம்.ஜி.ஆர் நகரில் சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம்,எல்லாபுரம் ஒன்றியம்,கன்னிகைபேர் எம்.ஜி.ஆர் நகர் பெருமாள் கோவில் எதிரே சமத்துவ பொங்கல் விழா மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு,தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சேர்ந்த பணியாளர்கள் அமுல், சித்ரா, 4-வது வார்டு உறுப்பினர் ராஜன் ஆகியோர் தலைமையில் ஊராட்சி மன்ற துணை தலைவர் மேனகா பிரேம்ராஜ்,ஊராட்சி செயலர் பொன்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மியூசிக்கல் சேர்,லெமன் ஸ்பூன்,பன் சாப்பிடுதல்,தண்ணீர் நிரப்புதல்,கோலப்போட்டி,ஓட்டப் பந்தயம்,பானை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. முதலிடத்தை பெற்ற மூன்று பேருக்கு பரிசு வழங்கப்பட்டது.கோலப் போட்டியில் முதல் பரிசு பெற்றவருக்கு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு பெற்றவருக்கு ரூ.2,500, மூன்றாம் பரிசு பெற்றவருக்கு ரூ.2,000 உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இதில்,கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெண் ஒருவர் பாடிய பாடலை அனைவரும் பாராட்டினர்.

Tags

Next Story
ai in future agriculture