ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கடத்திய ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது

ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கடத்திய ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது
X

பைல் படம்.

ஆந்திராவிலிருந்து சென்னைக்கு ஒரு கிலோ கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திராவிலிருந்து சென்னைக்கு ஒரு கிலோ கஞ்சா கடத்த முயன்ற வாலிபர் இன்று கைது செய்யப்பட்டார்.

டெல்லியைச் சேர்ந்த நந்த கிஷோர் மகன் ராஜ் குமார். இவர் நேற்று மாலை ஆந்திரா மாநிலத்தில் இருந்து பேருந்து மூலம் ஒரு கிலோ கஞ்சாவை எடுத்து வந்தார். அப்போது, திருவள்ளூர் மாவட்டம், பாதிரிவேடு போலீசார் பேருந்தை மறித்து சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

சோதனையில் ராஜ்குமார் மறைத்த வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து ராஜ்குமாரை வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai healthcare technology