தமிழக ஆந்திர எல்லை சோதனைச் சாவடியில் போலீசார் ரும் தீவிர வாகன சோதனை

தமிழக ஆந்திர எல்லைகளில் தீவிர வாகன தணிக்கை
வெளிமாநில வியாபாரிகள் இடைத்தரகு முறையில் வெளிமாநிலங்களில் இருந்து நெல்லை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து தமிழகத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகவிலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசின் உத்தரவின் பேரில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரும் தமிழக ஆந்திர எல்லைகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடியில் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் தீவிர வாகன தணிக்கை ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களில் தமிழக அரசு வலியுறுத்திய விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பின்னரே வாகனங்கள் தமிழக எல்லையில் அனுமதிக்கப்பட்டன
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu