மேம்பாலத்தில் எரியாத மின்விளக்குகளால் இருட்டில் மக்கள் அவதி : உடனே சரிசெய்யப்படுமா?

மேம்பாலத்தில் எரியாத மின்விளக்குகளால் இருட்டில் மக்கள் அவதி : உடனே சரிசெய்யப்படுமா?
X

மேம்பாலத்தின் மீது எரியாத மின்விளக்குகள்.

பெரியபாளையம் அருகே அழிஞ்சிவாக்கம்- பாஷிகாபுரம் இடையே கொசஸ்தலை ஆற்றின் மீதுள்ள மேம்பாலத்தில் விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

பெரியபாளையம் அருகே மேம்பாலத்தில் மின் கம்பங்களில் விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். புதிதாக மின்விளக்குகளை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே அழிஞ்சிவாக்கம், அத்திவாக்கம், தண்டு மேடு,ஆலப்பாக்கம், திருக்கண்டலம், நெய்வேலி, அத்தங்கி காவனூர், உள்ளிட்ட 10.க்கு மேற்பட்ட கிராமங்களில் சுமார் 20,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் வெளி செங்குன்றம், சென்னை,ஆவடி, பூச்சி அத்தி பேடு, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலை நிமித்தமாகவும், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் அழிஞ்சிவாக்கம்- பாஷிகாபுரம் கிராமங்களுக்கு இடையே செல்லும் கொசஸ்தலை ஆற்றை கடந்து சென்று வந்தனர்.

மழைக்காலம் வந்துவிட்டால் ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு செல்லும் அப்போது மேற்கொண்ட கிராம பகுதிகளை சேர்ந்த மக்கள் சுமார் 15 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை இருந்தது.ஆற்றைக் கடந்து செல்ல பகுதி மக்கள் உயர்மட்ட மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என அரசுக்கு நீண்ட காலமாக கோரிக்க வைத்து வந்த நிலையில். கடந்த அதிமுக ஆட்சியில் மேற்கொண்ட இரு கிராமங்களுக்கு இடையே கொசஸ்தலை ஆற்றின் மீது ரூபாய் 10.கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

மேலும் மேம்பாலத்தின் மீது 45. மின் விளக்குகள் அமைக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு வருடமாக மின்விளக்குகள் எறியாததால் வழியாக சென்று வரும் கிராம மக்கள் வாகன ஓட்டிகள் அப்படியே கடந்து செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் மின்விளக்குகள் எறியாத காரணத்தினால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த இருட்டை பயன்படுத்தி சமூக விரோத செயல்களும், வழிப்பறி கொள்ளை நடைபெறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. இந்த மேம்பாலத்தின் மீதுள்ள மின்விளக்குகளை சீர் செய்து தருமாறு அப்பகுதியை சேர்ந்த மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே தற்போதாவது மக்களின் நலனை கருதி மின்விளக்குகளை சீர் செய்து தருமாறு மேற்கொண்டு கிராம பொதுமக்களும், சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story