கும்மிடிப்பூண்டி அருகே கழிவு நீர் திறந்து விட்ட வாகனத்தை சிறை பிடித்த மக்கள்
சிறை பிடிக்கப்பட்ட கழிவு நீர் லாரி.
கும்மிடிப்பூண்டி அருகே புதுப்பேட்டை பகுதி கழிவு நீரை கிராம பகுதியில் விடப்பட்டதால் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை ஊராட்சி புதுப்பேட்டை கிராமத்தில் 2000.க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு உள்ள மக்கள் தங்கள் தேவைக்காக ஊராட்சி சார்பில் குடிநீர், சாலை போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஊராட்சி நிர்வாகம் சார்பில் செய்து தரப்படுகிறது.
இந்த நிலையில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கழிவுநீர் வாகனங்கள் தொழிற்சாலை மற்றும் கும்மிடிப்பூண்டி பஜார்,ரெட்டம்பேடு, தேர்வழி, நத்தம், புதுகும்மிடிப்பூண்டி, எளாவூர், மங்காவரம், மேட்டு காலனி, குருவாட்டுசேரி, அயநல்லூர், குருவாட்டுசேரி ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் எடுத்துக்கொண்டு சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மற்றும் வனப்பகுதியில் ஆங்காங்கே கழிவுநீர்களை இரவோடு, இரவாக கழிவு நீரை வழக்கமாக விடுவித்து வருகின்றனர்.
இது சம்பந்தமாக ஏற்கனவே நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிறு புழல்பேட்டை ஊராட்சி புதுப்பேட்டை பகுதியில் குடியிருப்பு பகுதியில் உள்ள காலி இடத்தில் கழிவுநீர் லாரி ஒன்று பல்வேறு இடங்களில் இருந்து சேகரித்த கழிவு நீர் கொண்டு வந்து திறந்து விடுவித்தனர்.இதை செயலை அறிந்த கிராம மக்கள் கழிவுநீர் வாகனத்தை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களின் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் ஆங்காங்கே கழிவு நீர் விடப்படுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இது சம்பந்தமாக போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை இணைந்து கழிவு நீர் திறந்து விடும் லாரிகளை சிறை பிடிக்கவும் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கருக்கு இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu