கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் மதுபானக் கடையை பொதுமக்கள் முற்றுகை

கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் மதுபானக் கடையை பொதுமக்கள் முற்றுகை
X

பைல் படம்.

தேர்வழி கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி நூற்றுக்கு மேற்பட்ட கிராம மக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் தேர்வழி கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த கடையை அருகே குடியிருப்புகளும், அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மற்றும் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் கும்மிடிப்பூண்டி காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம், உள்ளிட்ட அரசுத்துறை சார்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தக் கடையில் மது வாங்குபவர்கள் சாலையிலே அமர்ந்து மது அருந்திவிட்டு சாலையில் சென்று வரும் பொது மக்களையும், பள்ளி மாணவர்களை கேலி, கிண்டல் செய்வதோடு சில நேரங்களில் வழியாக சென்று வாகனங்களை வழி மறைத்து வைப்பறியும் அடிக்கடி நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்களின் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த கடையை உடனடியாக மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் பலமுறை முறையிட்டும் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இதனால் ஆத்திரமடைந்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் ஒன்று கூடி அரசு டாஸ்மாக் மதுபான கடை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி ஆய்வாளர் வடிவேல், போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது குறித்து அப்பகுதி பெண்கள் தெரிவிக்கையில் இந்த கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், இதனால் அப்பகுதியில் பல்வேறு வழிப்பறி திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பதோடு தாங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்னர் இந்தக் கடையை அகற்ற வேண்டும் என இரண்டு முறை இது சம்பந்தமாக ஆர்ப்பாட்டம் நடத்தியும் அப்போது அதிகாரிகள் வந்து இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதாக உறுதி அளித்து சென்றனர்.

ஆனாலf தற்போது வரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் போராட்டத்தை கையில் எடுத்தோம் என்றும், உடனடியாக இந்த கடையை அகற்றவில்லை என்றால் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவோம் என்று பொதுமக்கள் எச்சரித்து போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture