சின்ன ஓபுளாபுரம் பால் முனீஸ்வரர் கோவில் மகாகும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது

Pal Muneeswaran Temple
X

Pal Muneeswaran Temple

Pal Muneeswaran Temple-பால் முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Pal Muneeswaran Temple-திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஓபுளாபுரம் கிராமத்தில் ஸ்ரீபால் முனீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சின்ன ஒபுளாபுரம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீபால் முனீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகள் அருளும் கோயில் உள்ளது.

பழமையான இக்கோயில் சிறிய அளவில் இருந்தது, இதனைபுதுப்பித்து அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் முடிக்கப்பட்டு கலச புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. யாகசாலையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை 9.30. மணி அளவில் புரோகிதர்கள் கோபுர கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் ஆலயத்தில் உள்ள மூலவருக்கு பால்.தயிர். சந்தனம்.உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் அருளானந்தம்,தங்கராஜ், விவேகானந்தன் ஆகியோர் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் திமுக கழக உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பி னர் கி வேணு, மாநில தகவல் தொ ழில் நுட்ப அணி துணைச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான சி எஸ் சேகர், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூ ண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே. கோவிந்தராஜன் பொதுகுழு உறுப்பினர் குணசேகரன், ஒன்றியசெயலாளர்கள் கிவே ஆனந்தகுமார், மணிபாலன், ஊராட்சிமன்ற தலைவர்கள் பெரிய ஒபுளாபுரம் செவ்வந்திமனோஜ்,ரெட்டம்பேடு எல்லம்மாள் குப்புசாமி சங்கர், கவுன்சிலர் எஸ்டிடி ரவி, பெருந்தச்சன் கலைமாமணி கீர்த்திவர்மன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தில் எராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்தவாறு பங்கேற்றனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதங்கள் வழங்கப்பட்டது .


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா