டிக்கெட் கவுண்டரில் ஆளில்லை: நீண்ட நேரம் காத்திருக்கும் ரயில் பயணிகள்

டிக்கெட் கவுண்டரில் ஆளில்லை:  நீண்ட நேரம் காத்திருக்கும் ரயில் பயணிகள்
X
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் டிக்கெட் கொடுப்பவர் வராததால் நீண்ட நேரம் பயணிகள் காத்திருக்கும் நிலைமை பலமுறை நடைபெறுவதாக குற்றச்சாட்டு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைக்கும் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கும் சுமார் 40 முதல் 50 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சில சமயம் கூடுதல் ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் தான் பெரும்பாலான கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சார்ந்த பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் சென்னையில் அரசு பணி செய்யும் பணியாளர்கள் என சென்னைக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் காலை 8 மணி முதல் 2 மணி வரை முன்பதிவு நடைபெறுவது வழக்கம். ஆனால் அன்றாடம் முன்பதிவு நேரமான காலை 8 மணிக்கு முன்பதிவு அறையில் பதிவாளர் வராததால் ரயில் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக இன்று காலை 8 மணி முதல் 9 மணி வரை முன்பதிவரையில் பதிவாளர் வராததால் ரயில் முன்பதிவு செய்ய வந்த பயணிகள் ஒரு மணி நேரமாக காத்துக் கிடந்தனர். இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் கும்மிடிப்பூண்டியில் உள்ள இரண்டு பொது டிக்கெட் விநியோக கவுண்டரில் ஒன்று கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கொரோனா காலகட்டத்தில் மூடப்பட்ட நிலையில் இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் ரயில் பயணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்


குறிப்பாக பள்ளி கல்லூரி நேரமான காலை 8:30 மணிக்கு கும்மிடிப்பூண்டி முதல் சென்னை வரை ரயில் இயக்கப்படுகிறது. அடுத்த ரயில் சுமார் ஒன்னரை மணி நேரம் கழித்து 9=55 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறது இதனால் இடைப்பட்ட ஒன்றரை மணிநேரம் ரயில் இல்லாததால் 8:30 மணிக்கு செல்லக்கூடிய ரயிலில் பள்ளி கல்லூரி மாணவர்களும் நிறுவனத்திற்கு செல்லக்கூடிய தொழிலாளர்களும் அதிக அளவில் ஒரே நேரத்தில் கூடுகிறது.

இதனால் பொது டிக்கட் அறையில் கூட்டம் கூடி சில சமயம் வாக்குவாதம் ஏற்பட்டு வாக்குவாதம் கைகலப்பாகவும் மாறிவிடுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் மூடப்பட்ட பொது விநியோக டிக்கெட் கவுண்டரை திறக்கவும் அதேபோல் முன் பதிவு அறையை சரியான நேரத்தில் திறக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

அதேபோல் கடமை தவறும் ரயில்வே ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ரயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil