திருவள்ளூர் மாவட்டம் திருக்கண்டலம் ஊராட்சியில் பனை விதை நடும் நிகழ்ச்சி
திருக்கண்டலம் ஊராட்சி ஏரிக்கரையில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருக்கண்டலம் ஊராட்சியில் ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை எல்லாபுரம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சத்தியவேலு துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலம் ஊராட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த ஊராட்சியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி கரையில் ஐந்து அடி இடைவெளியில் ஒரு பனை விதை என ஏரி கரையை சுற்றிலும் பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு,ஊராட்சிமன்ற தலைவர் மதன் சத்யராஜ் தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் லிங்கதுரை மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
இதில், சிறப்பு அழைப்பாளராக எல்லாபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆ.சத்தியவேலு கலந்துகொண்டு பனை விதை நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.இந்நிகழ்ச்சியில், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளர் கே.எஸ்.எம்.குப்பன்,மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் தியாகராஜன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சாம்கமலேஷ்,ஊராட்சி இளைஞரணி அருண்குமார் கிராம பொதுமக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி செய்யும் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பனை மரம் அடி முதல் உச்சி வரை பலன் தரக்கூடியது. மேலும் இதற்கு அதிக அளவில் தண்ணீர் தேவையும் கிடையாது. புயல் காற்றை கூட தாங்கும் சக்தி பனை மரத்திற்கு உண்டு. பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர், நுங்கு, கருப்பட்டி ஆகியவை மருத்துவ குணம் உள்ளவை ஆகும். இதன் காரணமாக தற்போது தமிழகம் முழுவதும் பனை மரம் நடுதல் பற்றிய விழிப்புணர்வு அதிக அளவில் மக்களிடம் ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu