வடமதுரை ஊராட்சியில் புதிய பகுதிநேர நியாய விலைக் கடை திறப்பு

வடமதுரை ஊராட்சியில் புதிய பகுதிநேர நியாய விலைக் கடை திறப்பு
X

பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சி எர்ணாகுப்பம் கிராமத்தில் புதிய பகுதிநேர நியாய விலை கடையை ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கோதண்டன் திறந்து வைத்தார்.

Tiruvallur News -வடமதுரை ஊராட்சி எர்ணாகுப்பம் கிராமத்தில் புதிய பகுதிநேர நியாய விலை கடையை ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கோதண்டன் திறந்து வைத்தார்.

Tiruvallur News -திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் வடமதுரை ஊராட்சியில் சுமார் 5000.க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் வடமதுரை பெரிய காலனி பகுதியில் நியாய விலைக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த நியாவிலைக் கடையில் எர்ணாகுப்பம் பெரிய காலனி பகுதியைச் சேர்ந்த சுமார் 724 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வந்த நிலையில், எர்ணாகுப்பம் கிராம மக்கள் நீண்ட தூரம் சென்று பொருட்கள் வாங்கும் நிலை இருந்தது.

இந்த நிலையில் எர்ணாகுப்பம் மக்கள் அவர்கள் பகுதிக்கு நியாய விலைக் கடை வேண்டுமென்று அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். கோரிக்கையை ஏற்று புதிய ரேஷன் கடை எர்ணாகுப்பம் பகுதியில் புதிய கடை திறக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கோதண்டன் கலந்து கொண்டு ரிப்பன் பெட்டி கடையை திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கினார்.

இதில் கூட்டுறவு சங்க செயலர் முருகேசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாக்கியலட்சுமி ரமேஷ், வார்டு உறுப்பினர் கிரிஜா விஜயகுமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜோதி கருணாகரன், புஷ்பலிங்கம், ஜோதி, ராஜேஷ் நாயுடு, குமார் ஆகிய உட்பட பலர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story