ஈகுவார்பாளையம் ஊராட்சியில் கால்நடை மருந்துவமனை திறப்பு விழா

ஈகுவார்பாளையம் ஊராட்சியில் கால்நடை மருந்துவமனை திறப்பு விழா
X

பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி மருத்துவமனையை திறந்து வைத்தார்.

பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி புதிய கால்நடை மருந்துவமனையை திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஈகுவார்பாளையம் ஊராட்சியில் சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருந்துவமனை கட்டப்பட்டது. இதனை பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டிஜே கோவிந்தராஜன், மாவட்ட சேர்மன் உமாமகேஸ்வரி ஈகுவார்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர உஷா ஸ்ரீதர், கால்நடை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன், துணை இயக்குனர் டாக்டர் கோபு, இயக்குனர் உதவி இயக்குனர் டாக்டர் கோகுலகிருஷ்ணன், மற்றும் கால்நடை மருத்துவர்கள் சத்யபிரியா,பிரேம்குமார், கிருஷ்ணகுமார், ஜாஸ்மின், கால் நடை ஆய்வாளர்கள் மற்றும் பராமரிப்பு உதவியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!