திமுக சார்பில் எஸ்.ஆர்.கண்டிகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திமுக சார்பில் எஸ்.ஆர்.கண்டிகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் எஸ்.ஆர்.கண்டிகையில் ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் எஸ்.ஆர்.கண்டிகையில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி வழங்கினார்.

கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் எஸ்.ஆர்.கண்டிகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி 100பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எஸ்.ஆர்.கண்டிகையில் அப்பகுதி திமுக நிர்வாகி சுஜாகர் ஏற்பாட்டில் நடைபெற்ற முதல்வர் பிறந்தநாள் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பரிமளம் தலைமை தாங்கினார்.


ஒன்றிய பொருளாளர் சரவணன் வரவேற்றார். நிகழ்விற்கு மாவட்ட பிரதிநிதி காளத்தி, ஒன்றிய கவுன்சிலர் அமலா சரவணன், மெதிபாளையம் தலைவர் வள்ளியம்மாள் பழனி, மங்காவரம் தலைவர் பழனி, திமுக நிர்வாகிகள் பாத்தபாளையம் ராஜா, செயலாளர் மீசை ராஜா, ஓபசமுத்திரம் முன்னாள் தலைவர் செல்வம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஷ்வரி பங்கேற்று தமிழக அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

தொடர்ந்து விழாவில் திமுக சார்பில் 100பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஷ்வரி, ஒன்றிய செயலாளர் பரிமளம் வழங்கினர். மேலும் 200பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story