' அறுபதிலும் ஆசை வரும்' - மூதாட்டியை கொலை செய்த முதியவர் கைது

 அறுபதிலும் ஆசை வரும் - மூதாட்டியை கொலை செய்த முதியவர் கைது
X

கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சுலோச்சனா ( கோப்பு படம்) கொலை செய்த வீரய்யா. 

கும்மிடிப்பூண்டி அருகே, கள்ளக்காதல் விவகாரத்தில் கழுத்தை அறுத்து, மூதாட்டியை கொலை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சானாபுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொண்டமாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுலோச்சனா.(62) இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த சுலோச்சனா, கூலி வேலை மற்றும் அரசு வழங்கும் ஓய்வூதியத்தை வாங்கி பிழைப்பு நடத்தி வந்தார்.

இந்நிலையில், தனியாக வசித்து வந்த சுலோச்சனா கடந்த 20 ம் தேதியன்று, கொடூரமாக கழுத்து அறுக்கப்பட்டு பல்வேறு இடங்களில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர், அதிர்ச்சி அடைந்து உடனடியாக பாதிரிவேடு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார், மூதாட்டி உடலை,. பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், கும்மிடிப்பூண்டி அருகே ஏடூர் கிராமத்தை சார்ந்த வீரய்யா என்பவருடன் சுலோச்சனாவிற்கு பழக்கம் ஏற்பட்டு வீரய்யா அடிக்கடி சுலோச்சனா வீட்டிற்கு வந்து சென்றதும், இரவு நேரங்களில் தங்கியதும் தெரியவந்தது

இதனை அடுத்து வீரய்யாவை கைது செய்து விசாரணை செய்ததில், மூதாட்டி சுலோச்சனாவுடன், வீரய்யாவுக்கு 8 ஆண்டுகளுக்கு மேலாக பழக்கம் இருந்ததும் சில நாட்களாக சரியாக பேசுவதில்லை என்றதால், வேறு ஒருவரிடம் தொடர்பு இருப்பதாக தெரிந்ததால், வீரையா சுலோச்சனாவை தீர்த்து கட்ட முடிவு செய்து, சம்பவத்தன்று இரவு வீட்டுக்குள் நுழைந்து தனியாக இருந்த மூதாட்டியை சுலோச்சனாவை கழுத்தை அறுத்தும், பல பகுதிகளில் வெட்டி கொலை செய்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து வீரய்யா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story
ai in future agriculture