மேம்பாலம் பணியில் இயந்திரம் அருந்து விழுந்து வட மாநில தொழிலாளி உயிரிழப்பு

மேம்பாலம் பணியில் இயந்திரம் அருந்து விழுந்து வட மாநில தொழிலாளி உயிரிழப்பு
X

உயிரிழந்த ஹாசின் அலி.

பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் மேம்பாலம் பணிகளில் ஈடுபட்டிருந்த வட மாநில தொழிலாளி மீது இயந்திரம் அருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே புதுப்பாளையம் - காரணி இடையே ஆரணியாற்றில் உயர்மட்ட மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் மேம்பால பணிகளில் ஈடுபட்டிருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த ஹஸீன் அலி ( வயது 34) மீது இயந்திரம் அறுந்து விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியபாளையம் போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேம்பாலம் பணியின் போது கூலி தொழிலாளி மீது இயந்திரம் அருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சக தொழிலாளர்களே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!